ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில் திருவிழா துவக்கம்
Periya Mariamman Temple
Periya Mariamman Temple
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. மேலும் இந்த கோவிலின் வகையறா கோவில்களாக சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் நடுமாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டு தோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான ஈரோடு பெரியமாரியம்மன் மற்றும் வகையறா கோவில்களில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா வரும் 21ம் தேதி இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.
இதையொட்டி 10ம் தேதி காலை 7 மணிக்கு கோவில் முன்பு பந்தல் அமைக்கும் பணிக்காக பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வருகிற 25-ம் தேதி இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து 10 மணிக்கு கம்பம் நடும் நிகழ்ச்சியும் நடைபெறும். 29-ம் தேதி இரவு 10.30 மணிக்கு கிராம சாந்தியும், 30-ம் தேதி மாலை 5 மணிக்கு கோவிலில் கொடியேற்றமும் நடக்கிறது. அடுத்த மாதம் ஏப்ரல் 4-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவும், இரவு 8 மணிக்கு மாவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.
5-ம் தேதி காலை 9.30 மணிக்கு பொங்கல் விழாவும், மாலை 4 மணிக்கு சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடைபெறுகிறது. 6-ம் தேதி இரவு 9.30 மணிக்கு பெரிய மாரியம்மன், 7-ம் தேதி இரவு 8 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன், இரவு 9.30 மணிக்கு சின்ன மாரியம்மன் மலர் பல்லக்கில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா 8-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது. 9-ம் தேதி காலை 10.30 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu