ஈரோடு தபால் துறை: வரும் 22ம் தேதி ஓய்வூதியர் கூட்டம்

ஈரோடு தபால் துறை: வரும் 22ம் தேதி  ஓய்வூதியர் கூட்டம்
X

பைல் படம்.

தபால் துறை மேற்கு மண்டல அளவிலான ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் வரும் 22ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது.

தபால் துறை மேற்கு மண்டல அளவிலான ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் வரும், 22ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது. காணொலி காட்சி மூலம் அன்று மதியம் 12 மணிக்கு நடைபெற உள்ளது. பென்ஷன் பெறுதல் மற்றும் அது தொடர்பாக ஓய்வூதியர்களுக்கு உள்ள குறைகளை, உரிய ஆவணங்களுடன், 'அக்கவுண்ட்ஸ் ஆபீஸர், பி.எம்.ஜி., - டபிள்யூ.ஆர்., - கோவை - 641002' என்ற முகவரிக்கு, 'பென்ஷன் அதாலத்' என்ற தலைப்பில் தபாலாக அனுப்பலாம் அல்லது bgt.coimbatore@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் வரும் டிசம்பர் 15ம் தேதி மாலைக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டடுள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற தபால் துறை ஊழியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மேற்கு மண்டல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!