ஈரோடு - பாலக்காடு வரை செல்லும் பயணிகள் ரயில் இன்று இயக்கம்

ஈரோடு- பாலக்காடு பயணிகள் ரயில் இயக்கம்.
ஈரோட்டில் இருந்து பாலக்காடு வரை தினமும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் ஈரோட்டில் இருந்து தினமும் காலை 7.15 மணிக்கு கிளம்பி கோவை வழியாக பாலக்காடு டவுனுக்கு காலை 11:45 மணிக்கு செல்லும். இதேபோல் பாலக்காடு டவுனில் இருந்து மதியம் 2.40 மணிக்கு கிளம்பும் ரயில் கோவை வழியாக ஈரோட்டிற்கு இரவு 7.10 மணிக்கு வந்தடையும். ஈரோட்டில் இருந்து கோவை , திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
ஆனால், கொரோனா பரவல் காரணமாக இந்த ரயில் 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து நிறுத்தப்பட்டிருந்த ரயில்கள் அனைத்தும் ரயில்வே நிர்வாகம் இயக்க துவங்கி உள்ளது.
இந்நிலையில், ஈரோடு-பாலக்காடு ரயில் இன்று முதல் மெமு எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயக்கப்படுகிறது. ஈரோடு-கோவைக்கு கட்டணமாக ரூ.50. ஈரோடு-பாலக்காடு கட்டணமாக ரூ.70 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu