ஈரோடு வெளிவட்ட சுற்றுச்சாலை விரிவுபடுத்தும் பணி நிறைவு: கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

ஈரோடு வெளிவட்ட சுற்றுச்சாலை விரிவுபடுத்தும் பணி நிறைவு: கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
X

ஈரோடு வெளிவட்ட சுற்றுச்சூழலை விரிவுபடுத்தும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், சாலையின் தரம் குறித்து திருப்பூர் வட்ட கண்காணிப்புப் பொறியாளர் சரவணன் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

ஈரோடு வெளிவட்ட சுற்றுச்சாலை விரிவுபடுத்தும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், சாலையின் தரம் குறித்து திருப்பூர் கண்காணிப்பு பொறியாளர் இரா.சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு வெளிவட்ட சுற்றுச்சாலை விரிவுபடுத்தும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், சாலையின் தரம் குறித்து திருப்பூர் கண்காணிப்பு பொறியாளர் இரா.சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.

நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம், ஈரோடு உட்கோட்டத்தின் பராமரிப்பிலுள்ள ஈரோடு வெளிவட்ட சுற்றுச்சாலையை இருவழித்தடத்தில் இருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தும் பணிகள் முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டம் 2023-2024ன் கீழ் ரூ.59.60 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டு தற்போது சாலை விரிவாக்க பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த சுற்றுவட்ட நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டதால் ஈரோடு நகரப்பகுதியில் ஏற்பட்டிருந்த போக்குவரத்து நெரிசல் மற்றும் பயணநேரம் வெகுவாக குறைந்துள்ளது. மேலும், இச்சாலையானது நாமக்கல், திருச்செங்கோடு, கரூர், பெருந்துறை, கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் போன்ற மிக முக்கியமான வணிக பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாகவும் திகழ்கிறது.

இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை தலைமைப்பொறியாளர் கு.கோ.சத்யபிரகாஷ், அறிவுறுத்தலின் படி இப்பணியை திருப்பூர் வட்ட கண்காணிப்புப் பொறியாளர் இரா.சரவணன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது ஈரோடு கோட்டப்பொறியாளர் ஜெ.கு.ரமேஷ்கண்ணா . உதவிக் கோட்டப்பொறியாளர் ச.சரவணன், உதவிப்பொறியாளர் க.மணிகண்டன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!