பாதாள சாக்கடை குழாயின் சீரமைப்பை விரைந்து நிறைவேற்ற கோரிக்கை..!

பாதாள சாக்கடை குழாயின் சீரமைப்பை விரைந்து நிறைவேற்ற கோரிக்கை..!
X
பாதாள சாக்கடை குழாயின் சீரமைப்பை விரைந்து நிறைவேற்ற கோரிக்கை.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் அமைக்கப்பட்டது. அப்போது, அப்பகுதியில் இருந்த பாதாள சாக்கடை குழாய் சேதமடைந்தது. இதன் காரணமாக கருங்கல்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கழிவுநீர் காரைவாய்க்காலில் உள்ள கழிவுநீரேற்று நிலையத்துக்கு செல்வது தடை ஏற்பட்டது.

பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணி தொடங்கியது

இதனையடுத்து, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, பாதாள சாக்கடை குழாய் சேதமடைந்த பகுதியில் மீண்டும் குழி தோண்டப்பட்டு, அக்குழாயை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.


போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி

இதனால் அவ்வழியாக சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், கார், இருசக்கர வாகனங்கள், ஒரு வழி பாதையாக திருப்பி விடப்பட்டது. தற்போது பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணியில் சுணக்கம் இருப்பதால் அப்பகுதியில் தினசரி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

எனவே பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ஓட்டு அரசியலுக்கு இலவசங்கள் எனில் கடும் எதிர்ப்பு - பா.ஜ. அண்ணாமலை வெளியிட்ட பளிச் எச்சரிக்கை..!