ஈரோடு: சின்ன-பெரிய மாரியம்மன் கோவில் குண்டம் -தேர்த்திருவிழா

ஈரோடு: சின்ன-பெரிய மாரியம்மன் கோவில் குண்டம் -தேர்த்திருவிழா
X
ஈரோடு கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் மற்றும் பெரிய மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த நவம்பர் மாதம் பூச்சாட்டுதலுடன் துவங்கியது.

ஈரோடு கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் மற்றும் பெரிய மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த நவம்பர் மாதம் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் விழா இன்று காலை நடைபெற்றது. முன்னதாக தலைமை பூசாரி அக்கினிச்சட்டி கலசத்துடன் குண்டத்தில் இறங்கி துவக்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்கள் தங்களது நேர்த்திக்கடனை குண்டத்தில் இறங்கி அம்மனுக்கு செலுத்தினர். மேலும் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான காவலர்கள் கோவிலைச் சுற்றி இருந்தனர்.

சின்னமாரியம்மன் மற்றும் பெரியமாரியம்மன் கோவிலில் நாளை (6-ந் தேதி) இரவு கோவில் கரகம் எடுக்கும் நிகழ்ச்சியும், 7-ந் தேதி காலை கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தலும், மாவிளக்கு பூஜையும், 8-ந் தேதி இரவு 7 மணிக்கு கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், 9-ந் தேதி இரவு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் அம்மன் வீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

Tags

Next Story
ai solutions for small business