ஈரோட்டில் எஸ்சி, எஸ்டி அனைத்து பணியாளர்கள் நலச் சங்கத்தினர் அமைச்சர் மதிவேந்தனிடம் மனு

ஈரோட்டில் எஸ்சி, எஸ்டி அனைத்து பணியாளர்கள் நலச் சங்கத்தினர் அமைச்சர் மதிவேந்தனிடம் மனு
X

அமைச்சர் மதிவேந்தனுடன் தமிழ்நாடு அரசு எஸ்சி, எஸ்டி அனைத்து பணியாளர்கள் நலச் சங்கத்தினர்.

அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஈரோடு வந்த அமைச்சர் மதிவேந்தனிடம் தமிழ்நாடு அரசு எஸ்சி, எஸ்டி அனைத்து பணியாளர்கள் நலச் சங்கத்தினர் மனு அளித்தனர்.

அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஈரோடு வந்த அமைச்சர் மதிவேந்தனிடம் தமிழ்நாடு அரசு எஸ்சி, எஸ்டி அனைத்து பணியாளர்கள் நலச் சங்கத்தினர் மனு அளித்தனர்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் ஈரோடு மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஈரோடு காளிங்கராயன் மாளிகைக்கு வந்தார். அப்போது, தமிழ்நாடு அரசு எஸ்சி, எஸ்டி அனைத்து பணியாளர்கள் நலச் சங்கத்தினர் அமைச்சர் மதிவேந்தனிடம் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், ஈரோடு மாவட்டத்திற்கு மலை படி மற்றும் குளிர் காலப் படி ஆசிரியர் பணியாளர்களுக்கு வழங்கி தமிழக முதல்வருக்கு சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை பள்ளி விடுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மாத குறைந்த ஊதியம் பெற்று சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

மாவட்டத்தில் காலியாக உள்ள சமையலர் இரவு காவலர் போன்ற பணியிடங்களை தூய்மை பணியாளர்களுக்கு மாற்றுப் பணியாக வழங்க வேண்டும் என‌ அதில் தெரிவித்திருந்தனர். இதில், சங்கத்தின் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் வ.ரவி, சங்க ஆலோசகர் சுப்பிரமணியம், செயலாளர் பாலசுப்பிரமணியம், நிர்வாகிகள் ராமலிங்கம், சீனிவாசன், ரங்கன், பூமதி, சித்ரா, முனியம்மாள், பழனியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு