ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பெண் ஊழியர் தற்கொலை முயற்சி
பெண் ஊழியர் சுபா.
Erode Government Hospital -ஈரோடு மாமரத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுபா (வயது 25). இவர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தற்காலிக பல்நோக்கு பணியாளராக (மருத்துவ உதவியாளர்) வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த சுபாவிடம் மருத்துவமனையை கூட்டி பெருக்க வேண்டும் என்றும், கழிவறையை சுத்தப்படுத்த வேண்டும் என்றும் செவிலியர் கண்காணிப்பாளர் வசந்தி என்பவர் கூறியதோடு தரக்குறைவாக பேசியதாகவும் தெரிகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுபா இது எங்களுடைய வேலை இல்லை என்றும், நாங்கள் செவிலியர்களுக்கு உதவி செய்வதற்காகத்தான் நியமனம் செய்யப்பட்டு உள்ளோம் என்றும் கூறி உள்ளார். இதனால் அவருக்கும், அந்த செவிலியர் கண்காணிப்பாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த சுபா தான் வேலை பார்த்த வார்டில் இருந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்று தற்கொலைக்கு முயன்றார்.
இதனால் அவர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்கு சேர்த்தனர். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu