ஈரோடு: கனரா வங்கி சார்பில் இலவசமாக துரித உணவு தயாரித்தல் பயிற்சி

ஈரோடு: கனரா வங்கி சார்பில் இலவசமாக துரித உணவு தயாரித்தல் பயிற்சி
X

பைல் படம்.

"ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராம பஞ்சாயத்துக்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்".

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக "இலவசமாக துரித உணவு (Fast Food) தயாரித்தல் பயிற்சி" நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமில் ஆண் / பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

வருகின்ற 12-06-2023 முதல் 22-06-2023 வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. பயிற்சியின் போது, சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முகாமில் "ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராம பஞ்சாயத்துக்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்".


18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். " வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் " அல்லது " நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் " இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முகாமில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம்.

இடம் :

கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்,

ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2-ம் தளம்,

கொல்லம்பாளையம் பைபாஸ் ரோடு ,

ஈரோடு - 638002 .

முன்பதிவு செய்வதற்கான எண்கள் 👇🏼

8778323213

7200650604

0424-2400338

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!