ஈரோடு: 14.88 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி

ஈரோடு: 14.88 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 14.88 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தகவல்.

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் தொகை 23 லட்சத்து 77 ஆயிரத்து 315 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர். தற்போது, மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 14 லட்சத்து 88 ஆயிரத்து 387 பேர் செலுத்தி கொண்டு உள்ளனர். இது 82.27 சதவீதமாகும்.

இதேபோல், கொரோனா 2-ம் தவணை தடுப்பூசியை இதுவரை 8 லட்சத்து 89 ஆயிரத்து 845 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். இது 49.19 சதவீதமாகும். முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியை மொத்தம் இதுவரை 23 லட்சத்து 78 ஆயிரத்து 232 பேர் செலுத்திக் கொண்டு உள்ளனர். மாவட்டத்தில் இன்னும் 3 லட்சத்து 20 ஆயிரத்து 713 பேருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டியுள்ளது என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!