ஈரோடு: சினிமா தயாரிப்பாளர் கள்ளிப்பட்டி ஜோதி உடல்நலக்குறைவால் காலமானார்

ஈரோடு: சினிமா தயாரிப்பாளர் கள்ளிப்பட்டி ஜோதி உடல்நலக்குறைவால் காலமானார்
X

சினிமா தயாரிப்பாளர் கள்ளிப்பட்டிஜோதி.

Film Producer -திரைப்பட தயாரிப்பாளர் கள்ளிப்பட்டி ஜோதி உடல்நலக்குறைவால் கோபியில் காலமானார். சோலையம்மா, தாய்மனசு படங்களை தயாரித்துள்ள ஜோதி, 1000 படங்களுக்கு வெளிப்புற படப்பிடிப்பு மேலாளராக பணியாற்றியவர்.

Film Producer -தமிழ் சினிமாவை பொறுத்தவரை அனைவருக்கும் தெரிந்த ஜோதிராஜா என்ற கள்ளிப்பட்டிஜோதி. தமிழ் சினிமா இயக்குனரான கே.பாக்யராஜின் "தூறல் நின்னு போச்சு" படத்தில் ஆபீஸ் பாயாக அறிமுகமானார்.

அதன் பின் படிப்படியாக வளர்ந்தார். மேலும் 150 படங்களுக்கு மேலாக குட்டி கோடம்பாக்கம் என அழைக்கப்படும் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள 50 கிராமங்களில் லொகேஷன் மேனேஜராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

கற்பக ஜோதி பிலிம்ஸ் என்ற பெயரில் இயக்குனர் கஸ்தூரிராஜா வைத்து "சோலையம்மா" , "தாய்மனசு" என்ற படங்களை தயாரித்தவர் தான் கள்ளிப்பட்டி ஜோதி. இவர் கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கள்ளிப்பட்டி ஜோதி மறைவுக்கு தமிழ் திரைப்பட திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!