ஈரோடு: மாநில எல்லையில் காய்ச்சல் பரிசோதனை

ஈரோடு: மாநில எல்லையில் காய்ச்சல் பரிசோதனை
X
ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக மாநில எல்லையில் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் ஒமிக்ரான் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை. வெளி நாடுகளில் இருந்து வருவோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுகின்றது. மாநில எல்லையில் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், வெளி மாநிலங்களில் இருந்து வருவோர் தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளனரா? என்பது குறித்து மக்கள் நல்வாழ்வு துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மாவட்டத்தில் தினமும் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 80 சதவீதம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசி 45 சதவீதம் பேர் செலுத்திக் கொண்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ai healthcare technology