ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தம்
கொரோனா தாக்கம் காரணமாக கடந்த வருடம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதைப்போல் ரயில் சேவைக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
பின்னர் தொற்றின் தாக்கம் குறைய தொடங்கி இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியதால் மீண்டும் பொது போக்குவரத்து தொடங்கியது. இதையடுத்து ரயில் சேவையும் தொடங்கியது. ஆனால் பயணிகள் ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட வில்லை.
எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அனைத்துமே, சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் முன்பதிவு உடன் புதுப்பெட்டி இல்லாமல் இயங்கி வருகிறது. இதுபோல் ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. தினமும் இரவு 9 மணிக்கு ஈரோட்டில் இருந்து மறுநாள் அதிகாலை 5 மணிக்கு சென்னைக்கு செல்லும்.
தற்போது கொரோனா 2-ம் அலை வேகம் எடுத்து உள்ளதால் மக்கள் பயணங்களை பெருமளவு தவிர்த்து வருகின்றனர். பயணிகள் வரத்து குறைந்ததால், நேற்று முதல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. வரும் 31-ஆம் தேதி வரை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே அலுவலர்கள் கூறியதாவது: ஈரோடு வழியே செல்லும் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கேரளாவில் நேற்று முதல், முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் ஆகிறது.
எனவே, மங்களூரு, ஆலப்புழா ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என அறிவித்துள்ளதால் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்த இரண்டு ரயில்களும் கேரளாவிலிருந்து தான் வரும். அங்கு முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளதால் ரயில்கள் இயக்கப்படுமா என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu