ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் தொடர்ந்து மந்த நிலை

ஈரோடு ஜவுளி சந்தை.
Erode Wholesale Market -ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) செயல்பட்டு வருகிறது. இங்கு 280 தினசரி கடைகள், 740 வாரசந்தை கடைகள் செயல்பட்டு வந்தன. மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு ஜவுளிகள் குறைந்த அளவுக்கு விற்கப்படுவதால் இங்கு எப்போதும் பொது மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். குறிப்பாக இங்கு நடைபெறும் வரை சந்தை உலகப் புகழ் பெற்றது. திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெறும். இதற்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் மொத்தமாக வந்து துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள். இந்த தொழிலை நம்பி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
கொரோனா தாக்கம் காரணமாக முதலில் தினசரி கடைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. வாரச் சந்தைக்கு அனுமதி அளிக்க படாமல் இருந்தது. ஆனால் இந்த வாரம் முதல் வார சந்தைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரமாக ஜவுளி சந்தை விற்பனை மந்த நிலையிலேயே இருந்து வருகிறது. சில்லரை விற்பனை ஓரளவு நடந்து வந்தாலும், மொத்த விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை 40 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதே சமயம் மொத்த வியாபாரம் வெறும் 20 சதவீதமே மட்டுமே நடந்ததாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்தனர். புரட்டாசி மாதம் பிறப்பு, அடுத்தடுத்து விசேஷ நாட்கள் வர இருப்பதால் அதிகளவில் வியாபாரம் நடைபெறும் எனவும், தற்போது ஜவுளி உற்பத்தி முழு அளவில் நடைபெற்று வருவதால் மொத்த வியாபாரம் சூடு பிடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu