வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி
X

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2,741 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி நடைபெற்றது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள்.வாக்குப்பதிவுக்கு தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவி.பேட் கருவிகள் ஆகியன ஏற்கனவே 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொறுத்தப்பட்டு, மாதிரி ஓட்டுப்பதிவு செய்து சரிபார்க்கப்பட்டன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி இன்று காலை தொடங்கியது.

தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்து வாகனங்கள் மூலமாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இதில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகிறது. வாகனங்களில் தேர்தலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!