மண்ணின் மைந்தன் எனக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள் : திருமகன் பேச்சு

மண்ணின் மைந்தன் எனக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள் : திருமகன் பேச்சு
X
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் தீவிர பிரசாரம் செய்தார். அப்போது மண்ணின் மைந்தன் எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றிப் பெற செய்யுங்கள் என தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா இன்று, அருள்வேலன் நகர், பாரதி நகர், ஞானபுரம், காந்தி நகர், நக்கீரர் வீதி, பாரி வீதி, கச்சேரி வீதி, குயவன் திட்டு போன்ற பகுதிகளில் கை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார். வாக்காளர்களிடம், வேட்பாளர் திருமகன் ஈவெரா பேசியதாவது:

நான் பிறந்து, வளர்ந்தது ஈரோட்டில்தான். எனது ஓட்டும், என் குடும்பத்தார் ஓட்டும், ஈரோடு கிழக்கு தொகுதியில்தான் உள்ளது. ஆனால் நான், இத்தொகுதிக்கு தொடர்பில்லாதவர் என தவறான பிரசாரத்தை சிலர் செய்கின்றனர். கிழக்கு தொகுதி மக்களுக்கு சேவையாற்ற, மண்ணின் மைந்தனாகிய எனக்கு வாய்ப்பளியுங்கள்.

மிகவும் சிறிய தொகுதியான இங்கு, அடிப்படை வசதிகள் கூட கடந்த, பத்தாண்டுகளில் நிறைவேற்றப்படவில்லை. கழிவு நீர் பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளதால், சுற்றுச்சூழல் மட்டுமின்றி, ஜவுளி தொழிலும், அதனை சார்ந்த பலரும் பாதித்துள்ளனர்.

சாலைகள் முற்றிலும் பழுதடைந்து, வாகனங்கள் செல்ல முடியாதபடி உள்ளது. குப்பைகள் கொட்டப்பட்டு, சுகாதார சீர்கேடாக உள்ளது. எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டால், அரசு வழங்கும் சம்பளம் தவிர வேறு எந்த வகையிலும் பயன் பெற மாட்டேன் என உறுதியளிக்கிறேன். உங்களது அடிப்படை வசதிகளை மேம்படுத்த கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு பேசினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!