/* */

நாளை முதல் வ.உ. சி. பூங்கா பகுதியில் காய்கறி மார்க்கெட் செயல்படும்: ஈரோடு மாநகராட்சி

ஈரோட்டில், நாளை முதல் வ .உ. சி.பூங்கா பகுதியில் மீண்டும் காய்கறி மார்க்கெட் செயல்படும் என மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நாளை முதல் வ.உ. சி. பூங்கா பகுதியில் காய்கறி மார்க்கெட் செயல்படும்: ஈரோடு மாநகராட்சி
X

ஈரோடு ஆர்.கே.வி ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி மார்க்கெட், கடந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக, தற்காலிகமாக ஈரோடு வ. உ. சி பூங்கா பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் தற்காலிக மார்க்கெட் கட்டப்பட்டு செயல்பட தொடங்கியது.

இங்கு, 700க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகளும், 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகளும் செயல்பட்டு வருகிறது. இரவு முழுவதும் மொத்த வியாபாரமும், காலையில் சில்லரை வியாபாரமும் நடைபெற்று வந்தது. மாவட்டம் முழுவதும் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருவதால் வ.உ.சி காய்கறி மார்க்கெட் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும்.

இதனிடையே, கொரோனா தாக்கம் அதிகரித்ததால், கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து வ.உ.சி பூங்கா பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது. பின்னர் ஈரோடு பஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. அத்துடன், பொதுமக்களுக்கு குடியிருப்புக்கு நேரடியாக நடமாடும் வாகனங்கள் மூலமும் தள்ளுவண்டி மூலமும் காய்கறிகள் விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நாளை முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமானது, பஸ் போக்குவரத்து சேவை மீண்டும் தொடக்கம் என்ற அறிவிப்பாகும். பஸ் சேவை மீண்டும் தொடங்க உள்ளதால் பஸ் நிலையத்தில் செயல்பட்டு காய்கறி மார்க்கெட் நாளை முதல் மீண்டும் பழையபடி வ.உ.சி. பூங்கா பகுதியில் செயல்படத் தொடங்கும் என்று மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: நாளை முதல் பஸ் சேவை மீண்டும் தொடங்க உள்ளதால் பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் மீண்டும் வ. உ. சி. பூங்கா பகுதியில் மாற்றப்பட்டு செயல்பட தொடங்கும். இங்கு வழக்கம் போல் மொத்த வியாபாரமும், சில்லரை வியாபாரமும் நடைபெறும்.

மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் அங்கு சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை வியாபாரிகளும், காய்கறி வாங்க வரும்போது மக்களும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 4 July 2021 1:10 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு