கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி : ஈரோடு மாநகராட்சி அறிவிப்பு

கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி : ஈரோடு மாநகராட்சி அறிவிப்பு
X
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் இன்றைய தினம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மட்டும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரொனா தடுப்பூசி போடப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஈரோட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் கொரானாவில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினசரி சுழற்சி முறையில் தலா 20 வார்டுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் மாநகராட்சி பகுதிகளில் 18வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடும் முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே சமயம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!