காய்கறி வியாபாரிகள் 500 பேருக்கு தடுப்பூசி: ஈரோடு மாநகராட்சி வேகம்

காய்கறி வியாபாரிகள் 500 பேருக்கு தடுப்பூசி: ஈரோடு மாநகராட்சி வேகம்
X
ஈரோடு மாநகராட்சி சார்பில், பஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 500 காய்கறி வியாபாரிகளுக்கு இன்று தடுப்பூசி போடப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சுகாதாரத்துறையினர் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை, போர்க்கால அடிப்படையில் செய்து வருகின்றனர். குறிப்பாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 67 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தற்போது ஊரடங்கு காரணமாக வ.உ.சி. பூங்கா பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக ஈரோடு பஸ் நிலையத்தில் செயல்பட்டுவருகிறது. இங்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து காய்கறிகளை வாகனங்கள் மூலம் ஏற்றி சென்று, மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிக்கு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் காய்கறி வியாபாரிகள் உள்ளதால் மாநகராட்சி சார்பில் நடமாடும் வாகனம் மூலம் அவர்களுக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஈரோடு பஸ் நிலைய வளாகத்தில் நடந்த தடுப்பூசி செலுத்தும் முகாமில், இன்று 500-க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வட்டங்களில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil