ரயில் விபத்து மீட்பு விழிப்புணர்வு ஒத்திகை
ஈரோடு ரயில் நிலையத்தில் உள்ள பணிமனையில் (கூட்செட்) இன்று ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் விபத்தில் சிக்கினால் அவர்களை எவ்வாறு மீட்பது? என்பது குறித்த விழிப்புணர்வு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக ஈரோடு பணிமனையில் உள்ள தண்டவாளத்தில் இரண்டு ரயில் பெட்டிகளை கவிழ்த்து அதில் சிலர் சிக்கியது போன்றும், அவர்களை மீட்புக் குழுவினர் நவீன எந்திரங்கள் உதவியுடன் உயிரோடு மீட்பது போன்றும் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடததினர். இதற்காக அரக்கோணத்தில் இருந்து மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டனர். கவிழ்ந்த ரெயிலுக்குள் இடிபாடுகளுக்குள் சிக்கி பயணிகள் மரண கோஷம் எழுப்பினர். அப்போது மீட்புக் குழுவினர் நவீன எந்திரங்கள் உடன் ரயில் பெட்டியை துளையிட்டும், ஜன்னல் கம்பிகளை அழுத்தும் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிம் பயணிகளை மீட்கின்றனர். பின்னர் அவர்களை அங்கு தயாராக இருக்கும் மருத்துவ குழுவிடம் அழைத்துச் செல்கின்றனர். அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது போன்று தத்ரூபமாக மீட்பு குழுவினர் செய்து கட்டினர். இந்த விழிப்புணர்வு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை சேலம் கோட்ட உதவி மேலாளர் அண்ணாதுரை பார்வை. ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உள்பட ஏராளமான போலீசார் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu