ஈரோடு மேட்டூர் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறு: போலீசார் அபராதம்

ஈரோடு மேட்டூர் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறு: போலீசார் அபராதம்
X

ஈரோடு மேட்டூர் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு வில் வாக் போடும் போலீசார். 

ஈரோடு மேட்டூர் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

ஈரோடு மேட்டூர் ரோட்டில் எப்போதும் வாகன நெரிசல் இருந்து கொண்டே இருக்கும். மேட்டூர் ரோட்டில் இருபுறங்களிலும் ஏராளமான நிறுவனங்கள் இருப்பதால் இங்கு மோட்டார் சைக்கிள்கள், கார்கள், சரக்கு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருக்கும். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இதன் காரணமாக போக்குவரத்து போலீசார் மேட்டூர் ரோட்டில் வாகனங்களை நிறுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். மேலும் விதிமுறை மீறி நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். இந்நிலையில் இன்று ஈரோடு மேட்டூர் ரோட்டில் வடக்கு போக்குவரத்து போலீசார், போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு வில் லாக் போட்டு ஒவ்வொரு வாகனங்களுக்கும் தலா ரூ. 200 அபராதம் விதித்தனர். இன்று காலை முதல் மதியம் வரை 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், கார்கள், சரக்கு வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் வில் வாக் போட்டு அபராதம் விதித்தனர்.

Tags

Next Story