ஈரோடு கிழக்கு தொகுதியில் த.மா.கா வேட்பாளர் யுவராஜா தீவிர பிரசாரம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் த.மா.கா வேட்பாளர் யுவராஜா தீவிர பிரசாரம்
X
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் த.மா.கா கட்சியின் வேட்பாளர் யுவராஜா தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. கூட்டணியின் த.மா.க வேட்பாளர் யுவராஜா ஈரோடு பெரியார் நகர், காந்திஜி சாலை, பழைய ரயில்வே ஸ்டேஷன் சாலை போன்ற பகுதிகளில், இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார். அப்பகுதி வாக்காளர்களிடம், வேட்பாளர் யுவராஜா பேசியதாவது:

ஈரோடு பெரியார் நகர் ஓடை பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு, உரியவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இப்பகுதியில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட சமுதாய கூடம், விரைவில் நிறைவு செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.

பெரியார் நகரில் ஆர்ச் முதல் ஆர்ச் வரையிலும், 80 அடி சாலை பகுதியிலும் மக்கள் வசதிக்கான மினி பஸ் இயக்கம் உறுதி செய்யப்படும்.மழை நேரத்தில் ஸ்டோனி பிரிட்ஜ் பகுதி ஓடையில் வெள்ளமும், கொசுத்தொல்லையும், துர்நாற்றமும் ஏற்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இங்கு நடக்கும் பணிகளுடன் கூடுதல் பணி மேற்கொண்டு, அங்குள்ளவர்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தருவேன்.

பழைய ரயில்வே ஸ்டேஷன் சாலை விரிவாக்கம் செய்து, தேவையான மின் விளக்கு வசதி ஏற்படுத்தி, அங்குள்ள இரு ரயில்வே கேட் பகுதியில் உயர் மட்ட மேம்பாலம் அல்லது கீழ்பகுதியல் நுழைவு பாலம் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்வேன். இதனை நிறைவேற்ற, இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டுப்போட்டு, என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!