இந்த தேர்தல் தனித்தன்மையான தேர்தல் : தி.க தலைவர் கீ.விரமணி

இந்த தேர்தல் தனித்தன்மையான தேர்தல் என்றும் இந்த தேர்தலில் முதலில் தயாரனது மக்கள் தான். மாற்றம் தேவை என்பதை மக்கள் உணர்கின்றனர் என வேட்பாளர் ஆதரவு பிரச்சார கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கீ.விரமணி பேசினார்...

ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் ஈரோடு மேற்கு தொகுதி வேட்பாளர் சு முத்துச்சாமி ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருமகன் ஈவெரா ஆகியோரை ஆதரித்து கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டட்டத்தில் பேசிய திராவிடர் கழக தலைவர் கீ.விரமணி, இந்த தேர்தல் தனித்தன்மையான தேர்தல் என்றும் இந்த தேர்தலில் முதலில் தயாரனது மக்கள் தான். மாற்றம் தேவை என்பதை மக்கள் உணர்கின்றனர் என்றார். திமுக - அதிமுக என்ற இரண்டு அணி தான் போட்டியில் உள்ளது.

மற்ற அணிகளுக்கு ஒரே முதலாளி தான். கொரோனா தொற்றை விட ஆபத்தானது RSS .அது இன்று அதிமுகவிற்குள் நுழைந்துவிட்டது. இதற்கு ஒரே தடுப்பூசி ஸ்டாலின் தான் .

அதிமுக கூட்டணியில் கொள்கையில்லை. அடிமைச்சானம் எழுதி கொடுத்துள்ளனர். தமிழகத்தை அடகு வைத்த அதிமுகவை தோற்கடித்து ஸ்டாலின் மீட்டு தருவார். பா.ஜ.க வின் போட்டி நோட்டவுடன் தான் .

அதிமுக மடியில் கனம் உள்ளதால் வழியில் பயம் ஏற்பட்டுள்ளதாகவும் மோடி வித்தைகளில் ஒன்று தான் தமிழ் மீது காட்டும் தீடீர் பாச உணர்வு என்றும் உரையாற்றினார்.

இந்த கூட்டத்தில வேட்பாளர்கள் சு.முத்துச்சாமி திருமகன் ஈ.வெ.ரா மற்றும் இ கம்யூனிஸ்ட் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!