ஈரோடு பஸ் நிலையம் விரைவில் இடமாற்றம்; மாநகராட்சி ஆணையர் தகவல்
ஈரோடு பஸ் நிலையம்.
ஈரோடு சத்தி சாலை, நாச்சியப்பா சாலை, மேட்டூர் சலை ஆகிய மூன்று பகுதிகளின் மையப்பகுதியில் மாநகராட்சி பஸ் நிலையம் அமைந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு பஸ் நிலையம் புனரமைப்பு செய்யப்படுகிறது. பஸ் நிற்கும் ரேக்குகள், மேற்கூறை நடைபாதை, பழைய கட்டடங்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் அதற்கான பராமரிப்பு பணிகள் ரூ.40 கோடியில் செலவில் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக முதலில் சேதமடைந்த தூண்கள் அமைந்த பகுதி அடைக்கப்பட்டது. அடுத்து பழைய கட்டடங்கள் இடிக்கப்பட உள்ளது. அதற்கு முன்பாக பஸ் நிலையம் சி.என்., கல்லூரி மைதானத்துக்கு தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறுகையில், ஈரோடு மாநகராட்சி பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40 கோடி செலவில் சீரமைக்கப்படுகிறது. அதில் காம்பவுண்டு சுவர், சக்தி சாலை பகுதியில் உள்ள பழைய கட்டடம் இடிக்கப்பட்டு சுரங்க வாகன நிறுத்தம், வணிக வளாகம், மினி பஸ் நிறுத்த அமைக்கப்படுகிறது.
கட்டடம் இடிக்கும் பணிகள் தொடங்கும் முன், பஸ் நிலையம் சி.என்., கல்லூரி மைதானத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பபடுகிறது. வருகிற ஆகஸ்ட் இறுதிக்குள் இடமாற்றம் செய்யப்படும். இதற்காக அங்குள்ள கடைகளை காலி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு பஸ் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஏற்கனவே 15 கடைகள் சேர்ந்தவர்கள் காலி செய்துவிட்டனர். மீதமுள்ளவர்கள் கடைகளை காலி செய்ய அவகாசம் கேட்டுள்ளனர்.
சோலார் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது.இதில் கரூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில் இருந்து வரும் பஸ்கள் நிறுத்தி வைக்கப்படும்.
இதேபோல் தற்காலிகமாக அமைக்கப்பட உள்ள சிஎன்சி கல்லூரி மைதானத்தில் உள்ள பஸ் நிலையத்தில் கோவை, சேலம் , திருப்பூர் போன்ற ஊர்களில் இருந்து வரும் பஸ்களும், டவுன் பஸ்களும் நிறுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu