ஈரோட்டில் தமிழ்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் தமிழ்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

ஈரோடு மாவட்ட தமிழ்புலிகள் கட்சியின் சார்பில், கால்நடை மருத்துவமனை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தமிழ்புலிகள் கட்சியின் தேனி மாவட்ட துணைச்செயலாளர் படுகொலையை கண்டித்து, ஈரோட்டில் தமிழ்புலிகள் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டத்தில் நேற்றிரவு, தமிழ்புலிகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் திருநாவுக்கரசை, மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். இந்த படுகொலையை கண்டித்து ஈரோடு மாவட்ட தமிழ்புலிகள் கட்சியின் சார்பில் இன்று, கால்நடை மருத்துவமனை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ் புலிகள் கட்சியின் ஈரோடு மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, கொலை வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணமும் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும், தமிழகத்தில் தொடரும் சாதிய கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!