புதிய திட்டங்கள் செயல்படுத்த ஆதரியுங்கள்: காங்., வேட்பாளர் திருமகன்

புதிய திட்டங்கள் செயல்படுத்த ஆதரியுங்கள்: காங்., வேட்பாளர் திருமகன்
X
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் புதிய திட்டங்களை கொண்டு வருவதற்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள் என கேட்டு திருமகன் ஈவெரா பிரசாரம் செய்தார்,

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா, மாநகராட்சி, 28, 29, 30வது வார்டுக்கு உட்பட்ட, திருநகர் காலனி, காந்திபுரம், குடிசைப்பகுதி, கே.என்.கே.சாலை, கண்ணையன் வீதி, ராஜாஜிபுரம் பள்ளி பகுதியில் கை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார். அப்போது பொதுமக்களிடம் வேட்பாளர் திருமகன் ஈவெரா பேசியதாவது:

நான் காங்கிரஸ் பாரம்பரியத்தில் இருந்து வந்துள்ளேன். கடந்த காலங்களில் மத்தியில் காங்கிரஸ், மாநிலத்தில் தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், பாலம், வளர்ச்சி பணிகளை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவோம்.

தற்போது, பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்படடு. தனியாருக்கு விற்கப்படுகிறது. வேலை செய்பவர்கள் வேலை இழக்கின்றனர். படித்தவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அரசு பொதுத்துறைகள் விற்கபடுவதன் மூலம், விலைவாசி உயரும். பொருட்கள் தட்டுப்பாடும், தரமற்ற சேவைதான் கிடைக்கும்.

இவற்றில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்த தி.மு.க., கூட்டணியில் எனக்கு கை சின்னத்தில் ஓட்டுப்போட்டு வெற்றி பெற செய்யுங்கள். இதன் மூலம், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி, கொரோனா கால நிவாரணம், 4,000 ரூபாய்,

உள்ளூர் அரசு பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம், ஆலய புனரமைப்புக்கு, 1,000 கோடி ரூபாய், மாணவர்களுக்கு கைகணினி, நீட் தேர்வை ரத்து செய்ய சட்டம், புதிய தொழிற்சாலைகள், அரசு பணிகளில் முன்னுரிமை போன்றவை பெற்றுத்தரப்படும். இவ்வாறு பேசினார். பின், காவேரி சாலை, கிருஷ்ணா தியேட்டர் பகுதி, வளையக்கார வீதி, ஆர்.கே.வி., சாலை போன்ற பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!