சாலை போக்குவரத்து கல்லூரி மாணவர் சேர்க்கை அரசின் விதிமுறைப்படி நடைபெறும் : அமைச்சர்
தூய்மை பணியை ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமி.
செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் 25ம் தேதி வரை தூய்மைப்பணி வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கொல்லம்பாளையத்தில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு தூய்மை பணிகளை தொடங்கி வைத்தனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:
தற்போது துவங்கப்பட்டுள்ள தூய்மைப் பணிகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் மட்டுமின்றி நீர்வழிப்பாதை, நீர்நிலைகளிலும் பணிகள் மேற்கொள்ளப்படும். நீர் நிலைகளை ஒட்டி சாலைகள் அமைக்க சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிக்கிய நாயக்கர் கல்லூரி அரசு கல்லூரியாக அறிவிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாலைப் போக்குவரத்து பொறியியல் கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளது. இனி மாணவர் சேர்க்கை அரசின் விதிமுறைப்படி நடைபெறும். போக்குவரத்து தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு நிரந்தரமாக 35% இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதி வாரியத்தின் கட்டிடங்கள் மட்டுமின்றி அரசின் அனைத்துத் துறைகளிலும் கட்டப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் வல்லுனர்களை கொண்டு தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புகாருக்கு உள்ளாகும் கட்டுமான நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu