ஈரோடு தெற்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக ஆலோசனை  கூட்டம்
X
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது குறித்து திமுக நிர்வாகிகள், வாக்குசாவடி முகவர்கள் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில், ஈரோடு மேற்கு தொகுதி தேர்தல் பணிமனை திறப்பு மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து திமுக நிர்வாகிகள் வாக்குசாவடி முகவர்கள் செயல்வீரர்கள் கூட்டம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும், திமுக துணை பொது செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசன், திமுக துணை பொது செயலாளர் அந்தியூர் செல்வராசு மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு தெற்கு மாவட்ட திமுக பகுதிக்குட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது குறித்தும், வாக்கு சேகரிக்கும் முறை, வாக்குசாவடி பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசனைகளை வழங்கினர். முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!