மிளகு வியாபாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி : எஸ்.பியிடம் புகார்

மிளகு வியாபாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி : எஸ்.பியிடம் புகார்
X

எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த மிளகு வியாபாரி.

மிளகு வியாபாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்துவிட்டதாக பாதிக்கப்பட்டவர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு.

ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் இன்று எஸ்.பி.அலுவலத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் மிளகு மற்றும் மஞ்சள் வியாபாரம் செய்து வருகிறேன். கடந்த மாதம் 20ஆம் தேதி கேரளாவிற்கு சென்று உங்கள் ஒரு டீலரிடம் 2500 கிலோ மிளகு பெற்று ஈரோடுக்கு வந்தேன். இங்கு உள்ள ஒரு ஜவுளி உரிமையாளர் இடம் 1820 கிலோ மிளகு விற்பனை செய்தேன். இதன் மதிப்பு ரூ.8 லட்சத்து 21 ஆயிரத்து 730. கடனாகப் கொடுத்தேன். பின்னர் அன்று இரவு அந்த ஜவுளி உரிமையாளர் குடோனுக்கு சென்றேன். ஆனால் அந்த ஜவுளி உரிமையாளர் அவரது மனைவி மற்றும் மகன் பணத்தைத் தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். பலமுறை அவர்களிடம் பணம் கேட்டும் பணம் தரவில்லை. இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி மீண்டும் அவர்கள் குடோனுக்கு சென்று பார்த்தோம். அப்போது அவர்கள் குடோனை காலி செய்து சென்றுவிட்டனர். அவரது செல்போனில் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி அவர்கள் வீட்டுக்கு சென்று பணம் கேட்டோம். அப்போது அவர் அவரது மனைவி மற்றும் மகன் மூவரும் சேர்ந்து என்னை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். என்னிடம் ரூ. 8 லட்சத்து 21, 730 மோசடி செய்த பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

Tags

Next Story