தமிழக முதல்வரிடம் நிவாரண நிதி வழங்கிய பத்திரிக்கையாளர்கள்

தமிழக முதல்வரிடம் நிவாரண நிதி வழங்கிய பத்திரிக்கையாளர்கள்
X

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பத்திரிக்கையாளர்கள் நிவாரண நிதி வழங்கிய போது. 

முதல்வர் நிவாரண நிதிக்கு ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 25 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு ஈரோட்டுக்கு வருகை புரிந்திருந்தார். ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் சந்தித்தனர்.

அப்போது பத்திரிகையாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் முதல்வர் நிவாரண நிதிக்கு ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பாக 25 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது. இதனையடுத்து முதல்வரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அந்த மனுவில் மாவட்ட அளவில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கும் அரசு அங்கீகார அட்டை வழங்க வேண்டும். தாலுகா நிருபர்களுக்கும் 5 ஆயிரம் ஊக்க தொகை வழங்க வேண்டும். பத்திரிகையாளர் குழந்தைகளுக்கு தனியார் பள்ளி, கல்லூரிகளில் 50 சதவீத கட்டண சலுகை ஆந்திர அரசு வழங்குவதை போல் வழங்க வேண்டும். கொரோனாவால் மறைந்த கோபிசெட்டிபாளையம் புதிய தலைமுறை செய்தியாளர் சந்திரசேகர் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரண நிதி வழங்க வேண்டும். எனக்கோரிக்கை விடுக்கப்பட்டடுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய பரிசீலனை செய்வதாக உறுதியளித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!