ராகுல் காந்தி பிறந்தநாள் : ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் நலத்திட்ட உதவி வழங்கல்

ராகுல் காந்தி பிறந்தநாள் : ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர்  நலத்திட்ட உதவி வழங்கல்
X
ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல்காந்தி பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டத்திலும் ராகுல் காந்தி பிறந்தநாள் இன்று காங்கிரஸ் கட்சியினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்பு பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதி காங். எம்.எல்.ஏ., திருமகன் கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் தொகுப்பு பைகளை வழங்கினார். இதேபோல் ஈரோடு சூரம்பட்டி நால் ரோடு, அரசு மருத்துவமனை ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிகளில், சிறுபான்மை பிரிவு துணை தலைவர் பாஷா, தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், மாநகர் மாவட்ட தலைவர் ஈபி ரவி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!