தந்தை பெரியார் பிறந்த நாள் : ஈரோடு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியார் பிறந்த நாள் : ஈரோடு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
X
தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து அரசியில் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு பெரியார் வீதியில் உள்ள தந்தை பெரியார் - அண்ணா நினைவகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணனுண்ணி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் . இதனையடுத்து அங்கு மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு பெரியாரின் வாழ்கை புகைப்படைகளை பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியின் போது ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி , அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பின் படி ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கு வளாகத்தில் அனைத்துறை அலுவலர்களும் சமூக நீதி நாள் உறுதிமொழியினை ஏற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!