ஹால்மார்க் யுனிக் எண் பதிவிற்கு எதிர்ப்பு : ஈரோட்டில் நகை கடை அடைப்பு

ஹால்மார்க் யுனிக் எண் பதிவிற்கு எதிர்ப்பு : ஈரோட்டில் நகை கடை அடைப்பு
X

ஈரோடு கடை வீதி பகுதியில் அடைக்கப்பட்டுள்ள நகை கடைகள். 

தங்கநகைகளில் ஹால்மார்க் யுனிக் எண் பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்ககோரி ஈரோட்டில் 500க்கும் மேற்பட்ட நகை கடைகள் கடையடைப்பு.

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் யுனிக் எண் பதிவிற்கு விலக்கு அளிக்ககோரி தமிழகம் முழுவதும் தங்க நகைகடை உரிமையாளர்கள் இரண்டரை மணி நேரம் கடை அடைத்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட தங்க நகை கடைகள் இன்று காலை 9மணி முதல் 11:30வரை இரண்டரை மணி நேரம் 500க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

மேலும் கடையின் முன்பு எதிர்ப்பு பேனர்களை வைத்து அடையாள கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து நகை கடை உரிமையாளர்கள் கூறும்போது, ஈரோடு மாவட்டத்தில் ஹால்மார்க் யுனிக் எண் பதிவு செய்வதற்கு இரண்டு மையங்கள் மட்டுமே உள்ளது. இதனால் நகைகளுக்கு ஹால்மார்க் யுனிக் எண் பதிவு செய்ய காலதாமதம் ஏற்படுகிறது. வடமாநிலங்களில் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல நாடு முழுவதும் ஒரே மாதிரியாக செயல்படுத்த வேண்டும். ஹால்மார்க் யுனிக் எண் பதிவு மையத்தில் பணியாற்றுபவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து காலதாமதத்திற்கு தீர்வு காண வேண்டும் என கூறினர்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை-  நிறுவனங்களுக்கு அறிவுரை