அம்மா உணவகங்களில் இன்று முதல் பார்சல் மட்டுமே அனுமதி

அம்மா உணவகங்களில் இன்று முதல் பார்சல் மட்டுமே அனுமதி
X
அம்மா உணவகங்களில் இன்று முதல் பார்சல் மட்டுமே அனுமதி

ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று முதல் அம்மா உணவகங்களில் பார்சலில் மட்டுமே உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஈரோடு மாநகரை பொருத்த வரை 13 இடங்களில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை, மதியம் என இரண்டு வேளைகளில் குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சாப்பிட்டு வருகின்றனர். கடந்த வருடம் கொரோனா காலகட்டத்தில் அம்மா உணவகங்களில் இலவசமாக பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் இதன் மூலம் பசியாறினர்.

தற்போது மாவட்டத்தில் மீண்டும் வைரஸ் தாக்கும் பரவி வருவதால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி இன்று முதல் அம்மா உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பார்சலில் மட்டுமே உணவு வழங்கப்பட்டு வருகிறது. எக்காரணம் கொண்டும் உணவகங்கள் மூடப்படாது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!