/* */

முழு ஊரடங்கு: காய்கறி- மீன் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்

நாளை முழு ஊரடங்கு அமலாவதால், காய்கறி கடைகள், மீன் கடைகள், இறைச்சிக்கடைகளில் இன்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

HIGHLIGHTS

ஈரோடு வ. உ. சி பகுதியில் பெரிய மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள், 50 -க்கும் மேற்பட்ட பழ கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு இரவு முழுவதும் மொத்த வியாபாரமும், காலை சில்லறை வியாபாரம் நடைபெறும். சாதாரண நாட்களில் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள்.

இந்நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், இன்று காலை முதலே வ.உ.சி. பூங்கா பகுதியில் உள்ள பெரிய மார்க்கெட்டுக்கு மக்கள் அதிகளவில் வரத் தொடங்கினர். காய்கறி வாங்க வரும் பொதுமக்களுக்கு நுழைவாயில் பகுதியில், கையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கின்றனர்.

குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வருகை தந்து, வேண்டிய காய்கறிகளை வாங்கி சென்றனர். மாநகராட்சி சார்பில், நாளை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. எனவே கடைகள் திறந்து இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இதேபோல் ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கும் வகையில் வட்டம் போடப்பட்டிருந்தது. அதில் வரிசையாக நின்று மக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர். கருங்கல்பாளையத்தில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

இறைச்சி கடைகளிலும், மளிகைக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நாளை முழு நேர ஊரடங்கு என்பதால் இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுப்பிரியர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

Updated On: 24 April 2021 1:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  2. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  3. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  5. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  6. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  7. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  8. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  9. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  10. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...