தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச்சோதனை

தேர்தல் பறக்கும் படையினர்  தீவிர வாகனச்சோதனை
X
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பறக்கும்படையினர் ஈரோட்டில் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக சட்டபேரவை தேர்தல் வாக்குப்பதிவு வருகின்றன ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன‌. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு 24 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய எல்லைகளான கருங்கல்பாளையம், கொடுமுடி, விஜயமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் காவல்துறையினர் சார்பில் சோதனை சாவடிகள் அமைத்து 24மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின் ஒருபகுதியாக ஈரோடு பெரியார் நகர் பகுதியில் பரிசு பொருட்கள், உரிய ஆவணங்கள் இன்றி அதிகளவு பணங்கள் எடுத்து சொல்பவர்கள் குறித்து காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் ஒளிப்பதிவாளர்களை கொண்ட பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனைகளை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!