தமிழகத்தில் ராகுல்காந்தி இரண்டாம் நாளாக பிரச்சாரம்
தமிழகத்தில் இரண்டாம் நாளாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல்காந்தி இன்று ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஊத்துக்குளி, பெருந்துறை ஆகிய பகுதிகளை தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் அரசு மருத்துவமனை சந்திப்பிலுள்ள காமராஜர், ஈவிகே.சம்பத் சிலைக்கு மாலை அணிவித்த ராகுல்காந்தி , பன்னீர்செல்வம் பூங்காவிலுள்ள பெரியார், அண்ணா , கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து தொண்டர்கள் இடையே உரையாற்றினார். அப்போது , தமிழ்நாடு என் குடும்பத்துடன் நீண்ட தொடர்பு கொண்டது என்றும் அது அரசியல் உறவு கிடையாது என்றார். பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகியோர் தமிழ் மொழிக்கு உரிய மரியாதையை கொடுக்க மறுக்கின்றனர் என்ற ராகுல்காந்தி எந்த அதிகாரமும், அழுத்தமும் தமிழ் மக்கள் மீது திணிக்க முடியாது என்றும் 1000 ஆண்டுகளாக தமிழ் மக்கள் யாருக்கும் அடி பணியாத மக்கள் என்றும், தமிழ் மக்கள் அன்புக்கு மட்டுமே அடிமையாக இருப்பார்கள் அன்புடன் தமிழ் மக்களிடம் பழகினால் அன்பை திரும்ப தருவார்கள் என்ற ராகுல் இதை பிரதமர் மோடி செய்யவில்லை என்றார்.
மோடி ஒரே மொழி , ஒரே மதம் என்ற கருத்தை புகுத்த பார்ப்பாதகவும், தமிழ் மொழியை இரண்டாம் இடத்தில் வைத்துள்ளார்கள் என்றும் இதற்கு அவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
பன்முக தன்மை கொண்ட நாடு இந்தியா என்றும், பன்முகத்தன்மையே நமது பலம் என்று குறிப்பிட்ட ராகுல், ஒவ்வொரு மொழி , மதத்தை பாதுகாக்கா வேண்டியது நமது கடமை என்றார். தமிழகத்தை தலைகீழாக மாற்றி உள்ளதாகவும், தமிழகத்தில் விவசாயிகளை ஒழித்து விட்டார்கள் என்றும் ,
முதல் முறையா குடியரசு தினத்தில. ராணுவத்திற்கு பதில் விவசாயிகள் டெல்லி செங்கோட்டையில் பேரணி நடத்த உள்ளார்கள் என்றும் GST பணக்கார்ர்களுக்காக கொண்டு வரப்பட்டது என்றார். மோடி அரசு விவசாயிகள், தொழிலாளர்களுக்கான அரசு இல்லை என்றும், முதல் முறையாக சீனா இந்தியாவிற்குள் உள்ளே வந்து ஆக்கிரமித்துள்ளதாகவும், இது தான் இந்தியாவின் உண்மையான நிலை என்றும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu