ஈராேட்டில் பலத்த மழை: சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

ஈராேட்டில் பலத்த மழை: சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி
X

கருங்கல்பாளையம் பகுதியில் திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக உள்ள சாலையில் திடீரென பெய்த மழையால் தண்ணீர் தேங்கியுள்ளது.

ஈரோடு மாநகர் பகுதியில் விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணி முதல் மாநகர் பகுதியில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் சாரல் மழையாக பெய்ய தொடங்கிய மழை பின்னர் நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்தது.

இதனால் மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதேபோல் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளாக தோண்டப்பட்ட ரோடுகளில் மழைநீர் தேங்கி நின்றது.

குறிப்பாக கருங்கல்பாளையம் பகுதியில் திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக உள்ள சாலையில் திடீரென பெய்த மழையால் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதைப்போல் மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி பகுதியிலும் இரவில் பலத்த மழை பெய்தது.

ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-

ஈரோடு - 42, மொடக்குறிச்சி - 31, கவுந்தப்பாடி - 18, பவானிசாகர் - 3.4, அம்மாபேட்டை - 3.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்