ஈரோடு கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 7 ஆயிரம் அழைப்புகள் - மக்களிடம் வரவேற்பு!

ஈரோட்டில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறை
ஈரோடு மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை செய்து வருகிறது. அதன்படி கடந்த 17-ந் தேதி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கொரோனா கட்டுப்பாட்டு அறை (வார் ரூம்) திறக்கப்பட்டு, 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இதில் கொரோனா சிகிச்சை பெற ஆக்சிஜன் கூடிய படுக்கை வசதிகள், தடுப்பூசி, பரிசோதனை குறித்தும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு குறித்து மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தெளிவுபடுத்த, 10 தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தினமும் பொதுமக்கள் நேரம் காலம் பார்க்காமல் , கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சி மற்றும் கிராமப் பகுதிகளில் இருந்து அதிகஅளவு அழைப்புகள் வருகின்றன. காய்ச்சல் வந்த நிலையில் எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை வழங்க மறுப்பதாக, பெரும்பாலானோர் கூறினர். கிட்டத்தட்ட 11 நாட்களில் மட்டும், மருத்துவ ஆலோசனை பெற இந்த கட்டுப்பாடு அறைக்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போன் அழைப்புகள் வந்துள்ளன.தினசரி சராசரி 700- க்கும் மேற்பட்ட போன் அழைப்புகள் வருவதாக, அதிகாரிகள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu