த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்
X
நல்லது செய்தவர்களுக்கு மக்கள் மனம் திறந்து வாக்களிப்பார்கள் : த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் யுவராஜாவை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம் செய்தார்.

முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஜி.கே.வாசன், தமிழக அரசின் அனைத்து துறை திட்டங்களும், சலுகைகளும் நகரம் முதல் கிராமம் வரை அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளது. இதனால் மக்கள் அரசின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த நம்பிக்கையால் அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியின் வெற்றி பிரகாசமாகி உள்ளது. ஏப்ரல் முதல் தேதியில் மீண்டும் இங்கு வந்து மேற்கு தொகுதியில் பிரசாரம் செய்வேன். பெரும்பாலான நேரங்களில் கருத்து கணிப்புகள் முழுமையான முறையில் கொடுப்பதில்லை. மக்கள் கணிப்புதான் நல்லது.

நல்லது செய்தவர்களுக்கு மக்கள் மனம் திறந்து வாக்களிப்பார்கள். அ.தி.மு.க. தொடர்ந்து நல்லதே செய்து கொண்டிருக்கிறது. எனவே மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்கள். இப்போது உள்ள அ.தி.மு.க. கூட்டணி வெற்றி கூட்டணி. எங்கள் கூட்டணியை மக்கள் ஏற்று கொண்டிருக்கின்றனர். வளர்ச்சி திட்டங்களை, இலவச திட்டங்களை தி.மு.க. வாயால் சொல்லி கொண்டிருக்கிறது. ஆனால் அதனை அ.தி.மு.க. செயலால் நிரூபித்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க.வுக்கு நம்பிக்கையோடு வாக்களிக்க தயாராக உள்ளனர். தமிழகத்தில் தேர்தலுககு பின் முதல் அணியாக வெற்றி அணியாக அ.தி.மு.க. நீடிக்கும். இரண்டாவது அணியாக, எதிர்கட்சியாக தி.மு.க. விளங்கும்.

பிற கட்சிகள் ஒரு பிடி மேலே போகாமல் அதே நிலையிலேயே நிற்கும் இவ்வாறு அவர் கூறினார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி வேட்பாளர் யுவராஜா, சிட்டிங் எம்.எல்.ஏ. தென்னரசு, த.மா.கா மாநில பொது செயலாளர் விடியல் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!