/* */

விநாயகர் சதுர்த்தி : ஈரோட்டில் கட்டுப்பாடுகளுடன் எளிமையான முறையில் கொண்டாட்டம்

இன்று விநாயகர் சதுர்த்தி விழாயொட்டி ஈரோட்டில் கட்டுப்பாடுகளுடன் எளிமையான முறையில் கொண்டாட்டப்பட்டது.

HIGHLIGHTS

விநாயகர் சதுர்த்தி : ஈரோட்டில் கட்டுப்பாடுகளுடன் எளிமையான முறையில் கொண்டாட்டம்
X

சம்பத் நகர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை.

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா அன்று இந்து முன்னணி சார்பில் ஈரோடு மாநகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபட்டு பின்னர் சிலைகள் ஊர்வலமாக சென்று நீர் நிலைகளில் கரைக்கப்படும். 2 அடி முதல் 12 அடி வரை பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வார்கள். இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து நீர் நிலைகளில் கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக வீடுகளில் சிறிய விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடையை மீறி பொது இடங்களில் சிலைகள் வைத்து வழி படுவோம் என ஒரு சில அமைப்புகள் தெரிவித்து இருந்தன. இதையடுத்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அரசு தடையை மீறி பொது இடங்களில் யாராவது விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் ஈரோடு சம்பத் நகரில் இன்று இந்து முன்னணி சார்பில் சரக்கு ஆட்டோவில் 7 அடி உயரம் உள்ள விநாயகர் சிலையை எடுத்து வந்து பொது இடங்களில் வழிபட முயன்றனர். இதையடுத்து வீரப்பன் சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பொது இடங்களில் வழிபட அனுமதி இல்லை. எனவே மாற்று இடங்களில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். இதையடுத்து இந்து முன்னணியினர் விநாயகர் சிலையை தனியார் இடங்களில் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இதைப்போல் கருங்கல்பாளையம் வீரப்பன் சத்திரம், காளைமாடு சிலை, கொல்லம்பாளையம், மூலப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். குறிப்பாக போன வருடம் பொது இடங்களில் எங்கெல்லாம் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டார்களோ அந்த இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஈரோடு மாநகராட்சியில் உள்ள விநாயகர் கோயில், கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், முனிசிபல் காலனி, கள்ளுகடை மேடு போன்ற பகுதியில் உள்ள சிறிய விநாயகர் கோயில்களில் பொதுமக்கள் சென்று வழிபட்டனர். விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஆனால் அதே நேரம் பெரிய கோவில்களில் பொதுமக்கள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டது. இவ்வாறு இன்று விநாயக சதுர்த்தியை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் முழுவதும் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை பின்பற்றி பொதுமக்கள் வீடுகளில் எளிமையான முறையில் கொண்டாடினர்.

Updated On: 10 Sep 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...