காந்தி ஜெயந்தி: கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்த ஆட்சியர்
காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி.
ஈரோடு மாவட்டத்தில் கதர் கிராம தொழில்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் காந்தியின் 153-வது பிறந்தநாள் விழா ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:
தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான நூற்போர் மற்றும் நெய்வோர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து, அவர்களை ஏழ்மை நிலையிலிருந்து முன்னேற்ற பாடுபட்டு வருவது கதர் கிராம தொழில் வாரியமாகும். 2021-22ம் ஆண்டிற்கு 45 பயனாளிகளுக்கு மானியமாக ரூ.1.30 கோடியும்,360 பேருக்கு வேலைவாய்ப்பு குறியீடு நிர்ணயம் செய்யப்படத்தில் 17 பயனாளிகளுக்கு மானியமாக ரூ.43.40 இலட்சம் அனுமதிக்கப்பட்டு அவரவர் வங்கி கணக்கிற்கு சேர்க்கப்பட்டுள்ளது. கதர் பருத்தி, கதர் பட்டு மற்றும் பாலிஸ்டர் ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி (ஜி.எஸ்.டி விலக்கு) அளிக்கப்பட்டுள்ளது.
'பட்டாடை என்றால் பட்டென்று நினைவுக்கு வருவது தூய பட்டில் வெள்ளி சரிகையில் ஆன கதர் பட்டே, பளபளக்கும் பட்டு சேலைகள் பலவிதம், காதிகிராப்ட் பட்டு சேலைகள் என்றென்றும் புதுவிதம்" எனவே கிராமமப்புற கைவினைப் பொருட்களையும், ஏழை, எளிய நெசவாளர்களால் தயாரிக்கப்படும் கதர் ஆடைகளையும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவரும் வாங்கி பயன்படுத்தி, அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவோம் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu