புரட்டாசி மாத பிறப்பையொட்டி மீன்களின் விலை அதிகரிப்பு

புரட்டாசி மாத பிறப்பையொட்டி மீன்களின் விலை அதிகரிப்பு
X
புரட்டாசி மாதத்திற்கு ஒரு வாரமே இருப்பதால் ஈரோட்டில் இன்று மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது

ஈரோடு மாநகர் பகுதியில் ஸ்டோனி பாலம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் சாதாரண நாட்களில் மக்கள் கூட்டம் காணப்படும். இங்கு கடல் மீன்கள் அதிக அளவில் கிடைப்பதால் மக்கள் அதிகளவில் வந்து செல்வார்கள்.

ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதேபோல் கருங்கல்பாளையம் காவிரி ரோடு உட்பட மாவட்டத்தில் உள்ள மற்ற இறைச்சி கடைகளிலும் வழக்கத்தை விட ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் அடுத்த வாரம் புரட்டாசி மாதம் பிறப்பதை யொட்டி இன்று ஈரோடு மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. காலை முதலே இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. புரட்டாசி மாத பிறப்பையொட்டி இன்று மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. மத்தி மீன் ஒரு கிலோ ரூ.200, ரோகு ரூ.180, வஞ்சரம் ரூ.800, பாறை, கிழங்கா ரூ.400, சுறா, சங்கரா போன்ற மீன்கள் விலை உயர்ந்துள்ளது. இதேபோல் மாநகர் பகுதியில் உள்ள மற்ற இறைச்சிக் கடை களிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. குறிப்பாக கோழி இறைச்சிகளை மக்கள் அதிகம் விரும்பி வாங்கிச் சென்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil