தீ தொண்டு வாரம்

தீ தொண்டு வாரம்
X

தமிழகத்திலுள்ள தீயணைப்பு துறை சார்பில் இன்று முதல் வரும் 20ஆம் தேதி வரை தீ தொண்டு வார விழாவானது கொண்டாடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்திலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையின் மாவட்ட அலுவலகத்தில் பணியின்போது உயிரிழந்த வீரர்களுக்கு மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் புளுகாண்டி மலர் வலையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மேலும் தீ தொண்டு வார விழாவில் பள்ளிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீத்தடுப்பு செயல் விளக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!