தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் எம்.எல்.ஏ அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல்

கொரோனா பரவலால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா வழங்கினார்.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கொரோனா நோய் பாதிப்புக்குள்ளான பகுதிகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈரோடு கிழக்குத் தொகுதிக்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா கலந்து கொண்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொண்ட தொகுப்புப் பைகளை வழங்கினார்.
இதேபோல் கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசித்து வரும் 400க்கும் மேற்பட்ட மக்களுக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அத்தியாவசியப் பொருட்களை எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா வழங்கினார். கட்சியின் சார்பில் வழங்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu