ஈரோட்டில் 45,335 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோட்டில்  45,335 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோட்டில் இதுவரை பொதுமக்கள் 45,335 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் தடுப்பூசி போட்டுக் கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்திருந்தனர். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் 24 அரசு மையங்களிலும், 42 தனியார் மருத்துவமனைகளிலும் இந்த தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போட விருப்பம் உள்ள பொதுமக்கள் அந்தந்த மையத்துக்கு நேரடியாக சென்று தங்களது ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசி போட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் 45 ஆயிரத்து 335 பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story