ஈரோடு: தக்காளி பெட்டியில் நெளிந்த பாம்பு- வியபாரிகள் அலறியபடி ஓட்டம்!!

ஈரோடு: தக்காளி பெட்டியில் நெளிந்த பாம்பு- வியபாரிகள் அலறியபடி ஓட்டம்!!
X

தக்காளி பெட்டிக்குள் இருந்த நாகப்பாம்பை பாம்புபிடி வீர்ர் பிடித்த காட்சி.

ஈரோடு காய்கறி சந்தை தக்காளி பெட்டியில் இருந்த பாம்பை கண்டு வியாபாரிகள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடியில் இருந்து மினி சரக்கு வாகனத்தில் விற்பனைக்காக தக்காளி பெட்டிகள் கொண்டுவரப்பட்டது.

ஈரோடு பேருந்துநிலையம் அருகே வ.உ.சி மைதானத்தில் செயல்படும் தற்காலிக காய்கறி சந்தையில் தக்காளி பெட்டிகளை இறக்க முயற்சித்த போது தக்காளி பெட்டியில் நாகப் பாம்பு இருப்பதை கண்டு வியாபாரிகள் அலறியடித்து ஓடினர்.

இதுகுறித்து பாம்புபிடி வீரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த பாம்புபிடி வீரர், தக்காளி பெட்டியின் இடையே ஒழிந்திருந்த நாகப் பாம்பினை பிடித்து சாக்குபையில் எடுத்து சென்றார். விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட தக்காளி பெட்டியில் நாகப் பாம்பு இருந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
ai marketing future