ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சந்தை வியாபாரிகள் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம்

ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையில், திமுக பிரமுகர் முறைகேடாக சுங்க கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி வசூலிப்பதாகக்கூறி, வியாபாரிகள் இன்று ஒருநாள் அடையாள கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு ஆர்.கே.வி ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி சந்தை, கடந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக ஈரோடு வ. உ. சி பூங்கா பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் தற்காலிக சந்தை கட்டப்பட்டு செயல்பட தொடங்கியது. இங்கு மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் என ஆயிரத்திற்கும் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சந்தைக்கு வரும் சரக்கு வாகனங்கள் வரும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணத்தை திமுக மாநில விவசாய அணி துணைச் செயலாளர் குறிஞ்சி சிவக்குமார், அருண் பிரசாத் என்ற இரு ஒப்பந்ததாரர்கள் கட்டணங்களை இரு மடங்காக உயர்த்தி வசூலிப்பதாகக் கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சி ஆணையரிடம் வியாபாரிகள் புகார் மனு அளித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து, ஒப்பந்ததாரர்கள் மார்க்கெட் நுழைவு வாயில் முன்பு புதுப்புது ஆட்களை வைத்து இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உள்ளே வரவிடாமல் அத்துமிறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்ற தொடர்ந்த அத்துமீறலில் ஈடுபடும் பிரமுகரை கண்டித்தும், முறையான சுங்கக் கட்டணத்தை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் குறிஞ்சி சிவக்குமார், தற்போது தமிழ்நாடு கேபிள்டிவி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai in future agriculture