இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: ஈரோட்டில் மளிகைப்பொருள் வாங்க இணையதளம் அறிமுகம்
மளிகைப் பொருட்கள் தேவை குறித்து, இன்ஸ்டாநியூஸ் இணையதளத்தில் நேற்று வெளியாகி இருந்த செய்தி.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநகர் பகுதியில் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது. மாநகர் பகுதியில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் குடியிருப்புப் பகுதிக்கு நேரடியாக வந்து காய்கறி, பழங்களை வாகனங்களில் வந்து விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி 500 வண்டிகளில் காய்கறி மளிகை பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எனினும், மளிகை சாமான்களும் மட்டும் 20 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளுக்கும் மளிகை சாமான்கள் வண்டிகள் செல்வதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மளிகை பொருட்கள் வாங்க முடியாமல் மக்கல் திண்டாடினர். இதுகுறித்து, இன்ஸ்டாநியூஸ் இணையதளத்தில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது.
இந்த செய்தியின் எதிரொலியாக, பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் ஈரோடு மாநகராட்சி சார்பில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி சார்பில் www.tnurbantree.tn.gov.in/erode/ என்ற இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் ஈரோட்டில் உள்ள முக்கிய மளிகை கடைகளில் பெயர்கள், மளிகை கடைக்காரர்களின் பெயர்கள், அவர்களது செல்போன் எண்கள், மளிகைக்கடை முகவரிகள், அவர்களின் இ.மெயில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பொதுமக்கள் பயன்படுத்தி தங்கள் பகுதிக்கு அருகே உள்ள மளிகை கடை எண்ணை தொடர்பு கொண்டு, தேவையான மளிகை சாமான்களை போனில் ஆர்டர் செய்து பெறலாம். இத்தகவலை, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu