ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈ.வெ.ரா வேட்பு மனுதாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈ.வெ.ரா வேட்பு மனுதாக்கல்
X
ஈரோடு மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட தொகுதி ஒதுக்கப்பட்டது. அதன் வேட்பாளர் திருமகன் ஈ.வெ.ரா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலானது வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போடடியிடம் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை கடந்த மார்ச் 12 முதல் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்ணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈ.வெ.ரா தனது வேட்புமனுவை கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி கமிஷனர் இளங்கோவனிடம் தாக்கல் செய்தார்.



Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!